0487 2329000 [email protected] Peringottukara, Thrissur

உங்கள் எல்லா சிக்கல்களுக்கும் இங்கே தீர்வு காணவும், 'ஸ்ரீ விஷ்ணுமயா தேவஸ்தானத்தில்'

abt2

பெரிங்கோட்டுக்கரை தேவஸ்தானம் நூற்றாண்டுகளின் பாரம்பரியத்துடனான முன்னோடி ஸ்ரீவிஷ்ணுமாயா சுவாமி மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஆலயம் ஆகும். நாங்கள் பகவான் ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமியை பெரிங்கோட்டுக்கரை கிராமத்திற்கு கொண்டு வந்த முதல் பக்தரான, பரமாச்சாரியா வேலுமுத்தப்பா சுவாமிகளின் திருவடிகளை பின்பற்றும் 5வது தலைமுறை ஆவோம். இன்று எங்கள் குடும்பக் கோயில் அனைத்து சாதிகள் மற்றும் மதங்களை சேர்ந்த பக்தர்களின் தங்குமிடமாக மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பக்தர்களும் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு யாத்திரையாக ஆலயத்திற்கு வருகிறார்கள். இங்கே அனைவருக்கும் அருளாசிகளும், மனம் மற்றும் உடலின் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகளும் கிடைக்கின்றன. பகவான் சிவபெருமான் மற்றும் கூலிவாகா போல் மாறுவேடத்தில் இருந்த பார்வதி தேவி ஆகியோரின் இணைப்பால் பிறந்த தெய்வீகக் குழந்தையான ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமி துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் மனிதர்களுடன் வசிக்க விரும்பினார், அவரே பெரிங்கோட்டுக்கரை தேவஸ்தானத்தின் பிரதான தெய்வம் ஆவார். ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமி மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஆகியோரின் ஆசீர்வாதங்கள் பக்தர்களின் துன்பங்களை விரட்டியடிக்கும், மேலும் நம்பிக்கை மற்றும் வெற்றியின் தெய்வீக ஒளியால் வாழ்க்கையை நிரப்பும். வியாபார தோல்வி, விரும்பத்தகாத திருமண வாழ்க்கை, திருமணம் செய்ய முடியாததால் வருத்தம் அல்லது குழந்தைகள் இல்லாததால் வருத்தம் மற்றும் நவக்கிரங்களின் (ஒன்பது கிரகங்கள்) அல்லது தெரிந்த அல்லது தெரியாத சில சக்திகளின் சாபத்தின் தீய விளைவுகள் காரணமாக ஏற்படும் துயரங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட பக்தர்களுக்கு ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமியின் ஆசீர்வாதம் மழையாக பொழிகின்றது. ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமியை அடைக்கலமாக தஞ்சம் அடையுங்கள். உங்கள் சாதி அல்லது மதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். பழம்பெரும் நாராயண குரு பெரிங்கோட்டுக்கரைக்கு வருகை புரிந்தார், அவருடைய வார்த்தைகளான ‘சாதி இல்லை, மதம் இல்லை, எல்லாம் நன்மைக்கே’ என்பதை நாங்கள் பின்பற்றுகின்றோம். இங்கு கடவுளின் விருப்பம் அடைக்கலம் தேடுபவரின் நிலைமை, சாதி, அந்தஸ்து, அல்லது மதம் ஆகியவற்றைக் கேட்பதற்கு எதிரானது ஆகும். பரம பக்தி மற்றும் முழுவதுமாக சரணடைதல் ஆகியவற்றுக்கே பெரிங்கோட்டுக்கரை தேவஸ்தானம் முக்கியத்துவம் அளிக்கின்றது. இங்கே ‘கடவுளும் பக்தர்களும் ஒரே மாதிரியானவர்கள்’ ஆவார்கள். இங்கே பக்தர்கள் திருமணக் கனவுகளை நிறைவேற்றவும் அல்லது குழந்தைகளைப் பெறுவதற்கான ஆசீர்வாதங்களைப் பெறவும், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்ப சண்டைகளை தீர்க்கவும், தீய நட்பு மற்றும் வறுமையிலிருந்து தப்பிக்கவும், குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகளை சரிசெய்யவும், நவக்கிரங்கள் அல்லது வேறு ஏதேனும் சக்தியின் சாபங்களின் தீய விளைவுகளால் ஏற்பட்ட தோல்வியில் இருந்து தப்பிக்கவும் வருகிறார்கள். ஆலயத்திற்குச் சென்று, பகவான் விஷ்ணுமாயா சுவாமியின் நடனமாடும் வடிவத்தை கண்டுகளிக்கின்றனர். நீங்கள் எல்லா வகையான நோய்களிலிருந்து குணமாவீர்கள், எல்லா வகையான பிரச்சினைகளிலிருந்து மீள்வீர்கள். விஷ்ணுமாயா சுவாமியின் அருள் நித்திய மகிழ்ச்சியையும் பாவ விமோசனத்தையும் தரும். பூஜை நேரங்களில் ஆலயத்திற்குச் சென்று அருள் பெறுங்கள். தங்கள் கனவுகள் நிறைவேறியபின் பக்தர்களின் மகிழ்ச்சியான முகங்களைக் காணும்போது நான் மனநிறைவை அடைகிறேன். உங்களால் அந்த புனித ஸ்தலத்திற்குச் சென்று பூஜைகளை நடத்த முடியாவிட்டால், எங்களுடைய முறையான ஆலோசனைப்படி ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமி மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஆகியோரை வழிபாடு செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள். ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமி மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஆகியோரின் திருவருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.”

சப் - தேவஸ்தானத்தில் டெட்டீஸ் டெம்பிள்ஸ்

Peringottukara Devasthanam

தேவஸ்தானத்தில் உள்ள துணை தெய்வங்களின் ஆலயங்கள் ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஆலயம்

bhu1

புவனேஸ்வரி காப்பாளர்களின் குடும்ப பெண் தெய்வம் மற்றும் தேவஸ்தானத்தின் பிரதான கடவுள் ஆவார். இத தெய்வத்தின் ஆலயம் முதன்மை ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ளது. பெரிங்கோட்டுக்கரை கிராமத்தை பாதுகாக்க இந்த தெய்வமே வேலு அவர்களிடம் ஸ்ரீ விஷ்ணுமாயா விக்கிரகத்தை நிறுவும்படி ஆலோசனை வழங்கினார். புவனேஸ்வரி என்றாம் ஒட்டுமொத்த உலகத்தின் இறைவி என்று அர்த்தமாகும். இந்த புண்ணியஸ்தலத்தில் இந்த பெண் தெய்வமே மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, நல்ல திருமண துணை மற்றும் குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான அருளாசிகளை வழங்குகின்றாள். தேவி புவனேஸ்வரிக்கான முக்கியமான கொண்டாட்டம் ‘திரைவிளையாட்டுக்கு’ பிறகு நடத்தப்படுகின்றது. இந்த விழா ‘கலமெழுதும் பாட்டு’ என பிரபலமாக அறியப்படுகின்றது. இது ஆலயத்திற்கு வருகை தருவதற்கான ஒரு தெய்வீக நிகழ்வாகும்.

கணபதி ஆலயம்

bhu2

கணபதி என்பவர் தேவஸ்தானத்தில் ஒரு முக்கிய துணை தெய்வங்களில் ஒன்றாவார். இந்த ஆலயம் பிரதான ஆலயத்தின் தென்மேற்கு பகுதியான புனித கன்னி மூலையில் அமைந்துள்ளது. கணபதி இங்கே பகவான் விஷ்ணுமாயாவின் பெரிய சகோதரனாக வணங்கப்படுகிறார். விஷ்ணுமாயா கைலாயத்திற்கு வருகை செய்தபோது, சிவபெருமானின் தங்குமிடத்திற்கு அவருடன் கணபதி மற்றும் முருகர் ஆகிய இருவரும் உடன் வந்தார்கள். இந்த ஆலயத்தில் கணபதி, மகாகணபதி ஹோமம் மற்றும் ஆடி மாதத்தில் ஆனையூட்டு உள்ளிட்ட கணபதி பூஜைகளுடன் வழிபடப்படுகிறார்.

குக்‌ஷிகல்பா சமாதி

bhu3

இது ஒரு புண்ணியஸ்தல்மாகும், இங்கே விஷ்ணுமாயாவின் 390 படை தெய்வங்கள் வசிக்கின்றன. இது ஸ்ரீகோவிலுக்கு இடது புறமாக அமைந்துள்ளது. பகவான் விஷ்ணுமாயாவின் சக்திக்கு அடுத்து இந்த ஆலயத்தில் ஒரு முக்கியமான சக்தியிடம் உள்ளது. குக்‌ஷிகல்பாவின் படை தெய்வங்கள் என்பவை பக்தர்களை காப்பதற்கான விஷ்ணுமாயாவின் படை ஆகும். அவர்களின் ஆற்றலை தக்கவைத்துக்கொள்ள பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் ‘குருதி’ மேற்கொள்ளப்படுகிறது. குக்‌ஷிகல்பாவின் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், அது பகவான் விஷ்ணுமாயாவின் முன்னோடி பக்தரான வேலு முத்தப்பனின் உறைவிடமாகும். பக்தர்கள் இங்கு வருகையில் இந்த இடத்தின் ஆழ்ந்த அமைதியை உணர முடியும்.

தாமோதர சுவாமிகளின் உறைவிடம் (தாமோதர சுவாமி சமாதி)

bhu4

பகவான் விஷ்ணுமாயா தனது பக்தர்களிடமிருந்து வழிபாட்டை பெறுவதை மிகவும் விரும்ப்பவர். முன்னாள் அர்ச்சகரான தாமோதரரின் சன்னதி பகவான் விஷ்ணுமாயாவை பார்க்கும்படி வடக்கு நோக்கியும் புவனேஸ்வரி ஆலயத்திற்கு தெற்கு புறமாகவும் உள்ளது. சிறப்பு நிகழ்வுகளில் சில சடங்குகள் இங்கு நடத்தப்படுகின்றன. இந்த சன்னதி தாமோதர சுவாமிகளின் வெண்கல சிலைடன் கண்கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த சன்னதி சபரிமலை மற்றும் பிற பல ஆலயங்களின் குடும்ப அர்ச்சகரான பிரம்ம ஸ்ரீ தரநெல்லூர் தந்திரி அவர்களின் முன்னிலையில் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ பிரம்மராட்சசு ஆலயம்

bhu5

ராட்சசு ஆலயத்தின் மற்றொரு துணைத் தெய்வம் ஆவார். ராட்சசு புவனேஸ்வரியை நோக்கியபடி ஒரு சிறப்பு கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது, இந்த ஆலயத்தின் ராட்சசு வீட்டிலுள்ள எந்தவொரு வாஸ்து குறைபாடுகளையும் சரிசெய்து, அங்கு வசிப்பவர்களுக்கு நல்வாழ்வை வழங்கும் திறனைக் கொண்டுள்ளார். வீடு தவறான இடத்தில் இருந்தால் அது அங்கு வசிப்பவர்களை பாதிக்கும். இந்த ராட்சசுவை வழிபடுபவது அத்தகைய குறைபாடுகளை சரிசெய்யும் மேலும் செழிப்பைக் கொடுக்கும்.

 

Call Now ButtonCall Now

Solutions For All Your Problems

Most Ancient & the Biggest Vishnumaya Temple in India
Contact Us For Pooja Suggestions For Your Problems
SUBSCRIBE NOW
close-link
Solutions For All Your Problems
Get Pooja Suggestions From Temple Office
Whatsapp Now